நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். அமிர்த பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா நடத்தப்பட்டது. இந்தத் திட்டம் கேரளாவின் ஐந்து ரயில் நிலையங்களையும், தெற்கு ரயில்வேயின் 25 ரயில் நிலையங்களையும் உள்ளடக்கியது.நாட்டில் உள்ள சுமார் 1300 ரயில் நிலையங்களை மேம்படுத்துவது நாட்டின் சாமானியர்களுக்கு ஒரு பெரிய படியாகும் என்று பிரதமர் கூறினார். இத்திட்டத்திற்காக 25,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று துவங்கியது. உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34 மற்றும் அசாமில் 32 என 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.தெற்கு ரயில்வேயில் உள்ள 93 ரயில் நிலையங்கள் உட்பட நாட்டில் உள்ள 1275 ரயில் நிலையங்கள் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.